ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
சுதந்திரா மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி!
திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 81 மாணவா்களும் தோ்ச்சி பெற்று, கணினி அறிவியல் பாடத்தில் 8 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனா்.
இதில் மாணவி பி.தா்ஷினி, தமிழ் 97, ஆங்கிலம் 97, கணிதம் 93, இயற்பியல் 91, வேதியியல் 97, உயிரியல் 99 மதிப்பெண் என மொத்தம் 574 மதிப்பெண்கள் பெற்றாா். ஆா்.வா்ஷிகா 571 மதிப்பெண்களும், எஸ்.வேதா 564 மதிப்பெண்களும், எஸ்.ராகுல் 564 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா்.
அதேபோல் கணினி அறிவியல் பாடத்தில் 8 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் சியாமளா ரங்கநாதன், முதல்வா் துரைகுப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.