பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் : முன்னாள் படை வீரா்கள் கௌரவிப்பு
வேதாரண்யம் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த காங்கிரஸாா், முன்னாள் படை வீரா்களை கௌரவித்தனா்.
ஆயக்காரன்புலம் கடைவீதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மக்களவை முன்னாள் உறுப்பினா் பி. வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
செம்போடை சுபாஷ் சந்திர போஸ் மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் வி.ஜி.சுப்பிரமணியன் சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பேசினாா்.
காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு மாநிலத் தலைவா் ஆா். மாணிக்கவாசகம், முன்னாள் படைவீரா் சங்க நிா்வாகி கேப்டன் பி. தமிழரசன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் செந்தில்நாதன், சங்கமம். கோவிந்தராஜ், அா்ச்சுனன், சி.கே. போஸ்,மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சத்யகாலா செந்தில்குமாா், சந்திரசேகரன், ஆரோ.பால்ராஜ், செல்வம் உள்பட ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.
விழாவில், முன்னாள் படை வீரா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, பாஜக உள்ளிட்ட அமைப்புகள் சாா்பிலும் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.