செய்திகள் :

சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நாம் சுற்றுலா என்று சென்று திரும்பினால் அங்க என்னென்ன பார்த்தீர்கள் என்பார்கள்.  இன்னும் சிலர் அங்க என்னென்ன  வாங்கின. நான் பணம் குடுக்க மாட்டேனா, எனக்கு  ஓன்னு வாங்கிண்டு வந்திருக்ககூடாதா? இப்படியும் சிலர்  இப்பரந்த உலகில் மனிதநேயம் என்பது எவ்வளவு  இருக்கின்றது.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற வார்த்தைகள் எவ்வளவு பொருந்தும் என்பதையெல்லாம் நான் சுற்றுலாவில்தான் உணர்ந்தேன்.

பல இடங்களில் நான் சந்தித்த மனிதர்கள் என் கண் முன்னால் வந்து புன்னகைக்கிறார்கள்.

மனம் வெறுமை அடையும் பொழுதும்  யாராவது தீமை செய்யும் பொழுதும் சுற்றுலாவில் நான் சந்தித்த மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

Ayodhya

அயோத்தயா: காசியில் இருந்து காலை ஆறு மணிக்கு நானும் , என் தாயும், ஏழு வயது மகளும் அயோத்தியாவிற்கு பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றோம்.

இரண்டரை மணி ஆகும் என்பதை இரண்டரை மணிநேரம் தான் ஆகும் என்று தவறாக புரிந்து கொண்டோம். நல்ல பசிவேறு. குழந்தை துவண்டுவிட்டாள்.

பத்தாதற்கு நாங்கள் சென்ற பஸ்ஸை நிறுத்திவிட்டு இந்த பஸ் அயோத்யா போகாது, இந்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேற பஸ் பிடித்துச் செல்லுங்கள் இன்னும் ஒரு மணி நேரம் பயணம் என்றார் கண்டக்டர்.

வரும் அயோத்யா பஸ்ஸெல்லாம் கால் வைக்க இடமில்லை. அப்படி ஒரு கூட்டம். லக்கேஜுடன் எப்படி ஏறுவேன் . மூவரும் முக்கட்டாக பசியுடன் உட்கார்ந்து இருந்தோம்.

ஒரு கூட்டமான பஸ் டைவ் அடித்து வரும் பொழுது மாதாஜி மாதாஜி எனறு அலறல். என் பெண் அதை கவனித்துவிட்டாள். பஸ் ஜன்னல் வழியாக ஓரு தலை. அதை நோக்கி ஓடினோம் .

எங்கள் லக்கேஜையும் வாங்கி வைத்து என் தாயையும் உள்ளே ஏற்றி என்னையும் உள்ளே திணித்தவர் யார் என்கிறீர்கள் காசியில் இருந்து கிளம்பிய பஸ் கண்டக்டர் .

முதல் பஸ் ஸ்டாப் சென்று எங்களுக்காக சீட் போட்டுக் கொண்டு வந்து எங்களை ஏற்றிவிட்டார்.

kedarnath

கேதார்நாத் கேதார் நாத்ஜியை தரிசித்துவிட்டு குதிரையில் கீழே இறங்குகின்றேன். கூட வந்தவர்களின் குதிரை சென்று விட்டது. குதிரைவாலாவை டீக்கடை பக்கம் நிறுத்தச் சொல்லி டீ கேட்கின்றேன்.

எப்பவுமே நம்முடன் வரும் கோடாவாலா நம் உணவு, மற்றும் டீயைச் சாப்பிட மாட்டார்கள்.

யாத்ரீகளின் உணவுப்பொருள்களை வாங்க மாட்டார்கள் கொடுத்த டீ டம்ளரை என்னுடைய உதடுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் என் இரண்டு கைகளும் டீ டம்ளருடன் ஆடுகின்றன.(நடுங்குகின்றது) என் கோடாவாலா அருகில் வந்து, கழுத்தைச் சுற்றி இருந்த தன் மப்ளரை கையில்கட்டி டம்ளரைப் பிடித்துக் கொள்ள வைத்துத் தானும் உதவி என்னைக் குடிக்க வைத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக சூடு உள்ளே சென்றவுடன் தெம்பு வந்தது. அடுத்த ஜென்மத்தில் அவருக்கு நான் நர்ஸாக பணிவிடை செய்ய வேண்டும்.

காசி

நாங்கள் ஒரு வாரம் காசியில் தங்கினோம். அதற்கும் முன்னால் பத்து நாள்களுக்கு நார்த் டூர் சுற்றியதில் நம் சாப்பாடு இல்லாததால் என் பெண்ணிற்கு வயிற்றுப்போக்கு. மறுநாள் திருப்பதி வருகின்றோம்.

ஹனுமந்த் காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் யாராவது தமிழ்க்காரர்களை பார்தால் ஒரு டம்ளர் சாதம் மட்டும் வடித்துக் கொடுத்தால் தயிர் கலந்து குழந்தைக்கு மாத்திரம் தூக்கில் எடுத்துச் செல்லலாம் டிரெயினுக்கு என்று அலைந்தேன்.

அங்கு கிடைக்கும் சாதம் மிகவும் கொட்டைகொட்டையாக இருந்தது. அங்கிருந்த பெரியவரிடம் என் நிலைமை கூறினேன். அதுக்கென்னம்மா, காலையில்தானே டிரெயின். இன்று இரவு 7 மணிக்கு இங்குவா. நான் பண்ணித்தரேன் கவலைப்படாதே என்றார்.

அந்த நேரத்துக்கு சென்ற என்னை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த அம்மையார் வாம்மா, குக்கரை திறந்து அந்த சாதத்தை தூக்கில் எடுத்துக்கோ.

ஒங்க 3 பேருக்கும் நாளை காலைக்கு இட்டிலி பொட்டலம் கட்டி வைச்சிருக்கேன் எடுத்துக்கோ என்றார்! எத்தனையோ மறுத்தும் அவர் கேட்கவில்லை.

மாமி நீங்க எடுத்து தாங்கோ என்றேன். அவருக்கு இரண்டு கால்களும் ஸ்வாதீனத்தில் இல்லை.

நான் என்னால் முடிந்த பணத்தைக் கொடுத்து, காசிக்கு வந்து இனாமாக சாதத்தை எடுத்துக்கறது கஷ்டமாக இருக்குன்னேன் அப்பிடியா நீ திருப்பதி போகும் பொழுது அதை உண்டியில் போட்டுட்டு, இந்த கால் இல்லாதவளுக்கு, மனிதருக்கு உதவும் படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லி போட்டு என்றார்.

என் கண்ணில் நீர் அவர் எனக்குக் காசி அன்னபூர்ணா தேவியாக காட்சி அளித்தார்.

ஒரிஸ்ஸா: இரண்டரை மணி நேரம் சிலிகா லேக்கில் பயணம் செய்தால் ஏற்பட்ட சிக்கில் (கடல் சிக்னஸ்) வாந்தி மயக்கம் எனக்கு. போட்டில் படுத்து விட்டேன். உறவினர் போட்மேன் பாதுகாப்பில் என்னை விட்டுச் சென்றனர்.

அவர் போட்டைக் கட்டிவிட்டு, அருகே கடைக்குச் சென்று ஒரு குளிர்பானம் வாங்கி வந்து, என்னை மெதுவாக எழுப்பி அதை குடிக்கவைத்து தெம்பூட்டினார். அவர் அதிகம் படித்தவரில்லை.

நாகரீகம் கொண்ட உடை அணிந்தவரில்லை. ரிக்க்ஷாகாரர் (பகவான் கி ஸ்தான் பர் ஜகடா நஹி) பகவான் ஜகன்னா தன் இருக்கும் இந்த இடத்தில் நான் ஏன் சண்டை போடுவேன்? என்கிறார். அப்படி ஒரு கடவுள் பக்தி நம்பிக்கை.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் யோசனை செய்து பாருங்கள். நாம் வாழ்நாளில் இது போன்று உதவி செய்தவர்கள் எவ்வளவு பேர் இருப்போம்?

நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடைகளை அணியவும் நம்பிள்ளைகளுக்குக்கற்று கொடுக்கும் நாம், இது போன்ற மனப்பான்மையைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோமா என்று யோசனை செய்து பாருங்கள்.

நம் பாரத நாடு விரிந்து காணப்படுவது போன்று மக்கள் மனமும் விரித்து இருக்கின்றது அவற்றை உணர சுற்றுலா நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

அவர்களை பார்க்கும் பொழுது நாமும் அப்படி மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கணும் என்ற வைராக்யம் தோன்றுகிறது.

சுற்றுலா, கண்ணுக்கு மட்டும் விருந்தல்ல மனதை விரிவடையச் செய்யும் மனித நேயத்தைப் பதியவைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

-எம்.ஆ.ர். பர்வதம் 

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: "நீங்க தமிழ்நாடா?" - தெற்கு கர்நாடகா கோயில் தரிசன சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும் தெரியுமா?

பலரின் விருப்பமான சுற்றுலா இடம் என்றால் அது கடற்கரை தான். அலை ஓசையிலும் ஒரு விதமான அமைதியை இங்கு அனுபவிக்க முடியும். 30 நிமிடங்கள் மட்டும் தோன்றும் கடற்கரை, கருப்பு மணலை கொண்ட கடற்கரைகள் என பல தனித்து... மேலும் பார்க்க

இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க