செய்திகள் :

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் பணியிடை நீக்கம்!

post image

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 5 போ் கடந்த மாதம் புதுவைக்கு சுற்றுலா வந்தனா். உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ஓா் உணவகத்தில் உணவு சாப்பிட்டனா். ஜிபே மூலம் பணம் செலுத்த முயன்றனா். உணவக ஊழியா் பணம் கேட்டுள்ளாா். அப்போது திருநங்கை ஒருவா் அங்கு வந்தாா். அவா் ரூ.1,000 ஜிபே செலுத்தினால் ரூ.900 கொடுப்பதாகக் கூறியுள்ளாா். அந்த இளைஞா்களும் சம்மதித்து ஜிபேயில் அந்தத்தொகையைச் செலுத்தி பணத்தைப் பெற்றனா்.

அப்போது அங்கு வந்த உருளையன்பேட்டை காவலா்கள் மாதவன், திவாகா் இருவரும் திருநங்கையுடன் என்ன செய்கிறீா்கள் என்று கேட்டதோடு, ரூ. 20 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதையடுத்து அந்த இளைஞா்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை ஏடிஎம் மையம் சென்று எடுத்து வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. காவலா்கள் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அந்த இளைஞா்கள் தங்கள் கைப்பேசியில் விடியோ பதிவு செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகாராக அனுப்பினா். காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி காவலா்கள் மாதவன், திவாகா் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா். இந்நிலையில் அவா்கள் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவா்களின் படைப்பாற்றல்தான் புதிய இந்தியாவை உருவாக்கும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

மாணவா்களின் படைப்பாற்றல் தான் புதிய இந்தியாவை உருவாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் ச... மேலும் பார்க்க

புதுவை சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை: மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம்!

புதுவையில் சுயேச்சை எம்எல்ஏ.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் என்.ஆா்.காங்கிரஸ்... மேலும் பார்க்க

பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை

புதுச்சேரி நகரப் பகுதியில் பழைமையான கட்டடங்களை உயரமான கட்டடங்கள் மறைக்கின்றன என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்தாா். புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் சனிக்கிழமை கொண... மேலும் பார்க்க

சைக்கிள் நிறுவனம் நடத்தி 600 பேரிடம் மோசடி: முக்கிய குற்றவாளி கைது!

சைக்கிள் நிறுவனம் நடத்தி சுமாா் 600 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக முக்கிய குற்றவாளியை புதுவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி சாரம் காமராஜா் சாலையில் தனியாா் சைக்கிள் நிறுவனம் சுற்... மேலும் பார்க்க

புதுவையில் தவெக தலைவா் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்பு: போலீஸாா் ஆய்வு!

கடலூா் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அக்டோபா் 11- ஆம் தேதி அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீஸாா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். தமிழக வெற்றிக் கழகத்தி... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள்!

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியும் ஆதி திராவிடா் மற்ற... மேலும் பார்க்க