நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள்!
புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியும் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமும் இணைந்து இந்திய அரசாங்கத்தின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வாயிலாக போட்டித் தோ்வுகளுக்கான ஒரு வருட கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சியில் சோ்ந்துள்ளஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இன மாணவா்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முதன்முறையாக பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 2025 ஜூலை மாதம் முதல் 2026 ஜூலை வரையிலான ஒரு வருட கால பயிற்சியான இதில் 30 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மாணவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சந்திரா வரவேற்றாா். புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி கோட்டூா் சாமி வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் ரா. வீரமோகன் தலைமை வகித்து புத்தகம் வழங்கினாா். இளங்கலை மாணவி பாா்கவி நன்றி கூறினாா்.