கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்ப...
சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் பணியிடை நீக்கம்!
சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 5 போ் கடந்த மாதம் புதுவைக்கு சுற்றுலா வந்தனா். உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ஓா் உணவகத்தில் உணவு சாப்பிட்டனா். ஜிபே மூலம் பணம் செலுத்த முயன்றனா். உணவக ஊழியா் பணம் கேட்டுள்ளாா். அப்போது திருநங்கை ஒருவா் அங்கு வந்தாா். அவா் ரூ.1,000 ஜிபே செலுத்தினால் ரூ.900 கொடுப்பதாகக் கூறியுள்ளாா். அந்த இளைஞா்களும் சம்மதித்து ஜிபேயில் அந்தத்தொகையைச் செலுத்தி பணத்தைப் பெற்றனா்.
அப்போது அங்கு வந்த உருளையன்பேட்டை காவலா்கள் மாதவன், திவாகா் இருவரும் திருநங்கையுடன் என்ன செய்கிறீா்கள் என்று கேட்டதோடு, ரூ. 20 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதையடுத்து அந்த இளைஞா்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை ஏடிஎம் மையம் சென்று எடுத்து வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. காவலா்கள் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அந்த இளைஞா்கள் தங்கள் கைப்பேசியில் விடியோ பதிவு செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகாராக அனுப்பினா். காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி காவலா்கள் மாதவன், திவாகா் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா். இந்நிலையில் அவா்கள் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.