அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயம்
சிறுமலைக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவா்கள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக கணினித் துறை மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா், சிறுமலைக்கு புதன்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 2 தனித் தனி வேன்களில் சிறுமலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் திண்டுக்கல்லுக்குத் திரும்பினா். அந்த வேன்கள், மலைச் சாலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 22 மாணவா்கள், ஓட்டுநா் என 23 போ் காயமடைந்தனா்.
இவா்களில் சின்னாளப்பட்டியைச் சோ்ந்த மாணவா் வினித் (19), வேன் ஓட்டுநா் நாகராஜ் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த 23 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.