உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சூரியின் அடுத்த பட அப்டேட்!
நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர் வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாகவே வளர்ந்துவிட்டார்.
தற்போது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரால்ட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ தயாரிப்பில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் யார்? உள்பட மற்ற தகவல்களை நாளை (ஏப். 18) காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பிரபல நடிகருடன் மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்!