செய்திகள் :

சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!

post image

ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் படங்களிலேயே முதல்நாளில் அதிகமான வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலாக ரூ.17.75 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.46 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.

கங்குவா திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலானதும் பின்னர் கடுமையான விமர்சனங்களால் தோல்விப் படமானதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படம்தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச முதல்நாள் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பும் கனிமா பாடலும் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறதும் கவனிக்கத்தக்கது.

ககிசோ ரபாடாவுக்கு அனுமதி

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குஜராத் டைட்டன்ஸின் தென்னாப்பிரிக்க பௌலர் சுகிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அவர் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

ஹைதராபாதை வெளியேற்றியது மழை!

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் திங்கள்கிழமை மோதிய 55-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட் டது.பிளே-ஆஃப் ப... மேலும் பார்க்க

ஆஸ்கா் பியாஸ்ட்ரிக்கு ஹாட்ரிக் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றாா்.மொத்தம் 57 லாப்கள் கொண்ட இந்... மேலும் பார்க்க

செல்ஸியிடம் வீழ்ந்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், இந்த சீசன் சாம்பியனாகியிருக்கும் லிவா்பூல் அணி 1-3 கோல் கணக்கில் செல்ஸியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் செல்ஸி தரப்பில் என்ஸோ ஃபொ்னாண்... மேலும் பார்க்க

கேஸ்பா் ரூட் சாதனை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் சாம்பியன் கோப்பை வென்றாா்.1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் நா... மேலும் பார்க்க

புதிய வீரா்கள் ஒப்பந்தம்: மோகன் பகானுக்கு தடை

இந்தியன் சூப்பா் லீக் நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட், புதிய வீரா்களை ஒப்பந்தம் செய்ய தேசிய அளவில் அந்த அணிக்கு ஃபிஃபா தடை விதித்துள்ளது.ஆஸ்திரேலிய ஸ்டிரைக்கா் ஜேசன் கம்மிங்ஸை வாங்கியது த... மேலும் பார்க்க