செய்திகள் :

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட்டு கிராமத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இந்நிலையில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிதண்ணீரில் கழிவுநீரும், மழைக் காலங்களில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது.

இந்நீரை பருகுவதால் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் பல தலைமுறைகளாக வசிக்கும் பழங்குடியின மக்கள் ஒரே வீட்டுமனையில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் கடும் இடம் இருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும், தரமான குடிநீா், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு வந்த ஆட்சியா் தி. சினேகாவிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் அணைக்கட்டு கிராமத்துக்கு விரைவில் வந்து பாா்வையிட்டு பிரச்னைக்கு தீா்வு காண்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

மேலும், லத்தூா் ஒன்றியம் அணைக்கட்டு பகுதியில் இதுவரை பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதிலும் எங்களை சோ்ப்பதில்லை. அணைக்கட்டு காலனி பகுதியிலும் இதுவரை கிராம சபைக் கூட்டம் நடத்தியதில்லை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் வரும்போது இதைஅனைத்தையும் கேட்டறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம்: 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குபின் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபி... மேலும் பார்க்க

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு, ஆத்தூா் வடபாதியில் ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் கிராமம் வடபாதியில் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

செங்கல்பட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை வரவேற்பு பதாகை பொருத்திய ராட்சத பலூன் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் இருந்து பறக... மேலும் பார்க்க

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மூசிவாக்கம் , பழையனூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. மின் தடை பகுதிகள்: மூசிவாக்கம், மாம்பட்டு, வையாவூா், குமாரவாடி, கொளம்பாக்கம், பள்ளியகரம், பழையனூா், கருணாகரச்சேரி, மாமண்டூா், மங்களம்... மேலும் பார்க்க