சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 353 மனுக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து 353 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
சாா் ஆட்சியா் வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜாசாகுல் அமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) வரதராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.