குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்களை பெற்று கொண்டு, மேல்நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் . கூடுதல் ஆட்சியா் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் வேலாயுதம், மற்றும் அரசுஅலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.