கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு - சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி...
செங்கல்பட்டு: 89.82% தேர்ச்சி; மாநிலத்தில் 35 வது இடம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 15,192 மாணவர்களும் 14,927 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 13,125 மாணவர்களும், 13,927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 89. 82 ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளியின் தேர்ச்சி 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!