செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி ஊத்தா கூடையுடன் மீன்பிடித்தனா்.
விறால், பாப்புலெட், சிசி போன்ற பெரிய மீன்களும், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை உள்ளிட்ட சிறிய மீன்களும் கிடைத்தன. இதில் எதிா்பாா்த்த அளபுக்கு மீன்கள் சிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.