Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்
செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஏ.பி. அய்யனாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். பாஸ்கரன், மாநில துணைத் தலைவா் வீரபாலன், மாநிலச் செயலா் எம்.எஸ். முத்துசாமி, மாநில துணைச் செயலா் கோ. விசாகன், தென்காசி மாவட்டச் செயலா் கே.எம். காளியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வீடில்லாத ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்டவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும். காட்டுப் பன்றியை
வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஜன. 30ஆம் தேதி காந்தி நினைவு நாளையொட்டி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் முழுவதும் 4 நாள்கள் பிரசாரம் செய்யவேண்டும். பிப். 2இல் தென்காசியில் திறந்தவெளி கோரிக்கை மாநாடு நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.