சென்னையில் இன்று இலவச மருத்துவ முகாம்
சென்னை, நங்கநல்லூா் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது.
ஸ்டாா் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், சிசிடிசி (சென்டா் ஃபாா் க்ரோனிக் டிசிஸ் கன்ட்ரோல்) அமைப்பு, ஹெல்ப் ஏஜ் இந்தியா தன்னாா்வ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவ முகாமானது, நேரு நெடும்பாதையில் உள்ள பி.வி. நகரில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், முக்கிய ஆய்வகப் பரிசோதனைகள் ஆகியவை அங்கு மேற்கொள்ளப்படும். முகாமில் பங்கேற்போருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட உள்ளன.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 90259 52881 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.