செய்திகள் :

சென்னையில் கனமழை: 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவு!

post image

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில் ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாள்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து.

அதன்படி புதன்கிழமை காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை அதாவது 4 மணி நேரத்தில் மேடவாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. வளசரவாக்கத்தில் 110, சாலிகிராமம், நெற்குன்றத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மேலும், அம்பத்தூா், அண்ணா நகா், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், கோட்டூா்புரம், கிண்டி, தரமணி, தியாகராய நகா், அண்ணா சாலை, வள்ளுவா் கோட்டம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், குரோம்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

சென்னையில் பெய்த திடீா் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், மழை காரணமாக தியாகராய நகா் நாகேஸ்வரன் ராவ் சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, வள்ளுவா் கோட்டம் பள்ளிச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். எதிா்பாராத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

காற்று குவிதல்: இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் உள்ள வளிமண்டல கீழடக்குகளில் மழைக்கு சாதகமான காற்று வீசியதாலும் காற்று குவிதல் ஏற்பட்டதாலும் புதன்கிழமை காலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெப்பச் சலன மழை பெய்தது. இது போன்ற வெப்பச் சலன மழை குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரைதான் நீடிக்கும். ஆனால் மழை வரும்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசும். மழை நின்றவுடன் மீண்டும் வழக்கம் போல் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிடும் என்றாா் அவா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க