காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
சென்னையில் திடீா் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீரென மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமையும் மீனம்பாக்கத்தில் 102.76, நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில், மாலை நேரங்களில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராய நகா், மயிலாப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திடீா் மழைக் காரணமாக, வெப்பம் தணிந்து சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியது.