தடைகளை நீக்கி திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமம்! விஜயவாடா எடுபுகல்லு காம...
சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் உள்பட 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கிவைத்தார்.
டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, சென்னை வியாசாா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், இரண்டாவதாக பெரும்பாக்கத்தில் மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்காக புனரமைக்கப்பட்ட பணி மனையும், 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.