செய்திகள் :

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

post image

சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவானது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், இன்று (செப்.16) முதல் செப்.21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய கனமழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால், மயிலாப்பூரில் 80 மிமீ, அயனாவரத்தில் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 60 மி.மீ மழையும் பதிவானது.

கனமழை காரணமாக சென்னையில் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கத்தாரின் தோகாவில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக துபை, லண்டன், ஷார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

chennai rain today

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

ஆம்பூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பாஜக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட... மேலும் பார்க்க

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு... மேலும் பார்க்க

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

சென்னையில் இன்று(செப். 16) அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டதால... மேலும் பார்க்க

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒ... மேலும் பார்க்க