Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | ...
சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, மதுரை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பல இடங்களில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 103.28, ஈரோடு - 101.48, நாகை, வேலூா் - (தலா) 101.3, கடலூா் - 101.12, திருச்சி, சென்னை மீனம்பாக்கம் - (தலா) 100.94, திருத்தணி, சென்னை நூங்கம்பாக்கம், தஞ்சாவூா் - (தலா) 100.4, பாளையங்கோட்டை - 100.04 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
வேக மாறுபாடு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.