ஆணவக்கொலை: காதல் விவகாரத்தில் மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை!
சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை
சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வழக்கறிஞர் சுமதி தம்பதி. இவர்களுக்கு ஜஷ்வந்த் (19), லிங்கேஷ் (17) என இரு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், திருமங்கலம் காவல்நிலையத்துக்கு, மருத்துவர் பாலமுருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக தகவலளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, அந்த வீட்டிலிருந்து பாலமுருகன், சுமதி, ஜஷ்வந்த், லிங்கேஷ் ஆகிய 4 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.
தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் வெளியான செய்தியில், பாலமுருகனுக்கு ரூ.5 கோடி கடன் இருந்ததாகத் தெரிகிறது. கடன் நெருக்கடி காரணமாகவும், அதிலிருந்து மீளமுடியாத சூழல் நிலவியதாலும், மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகே மற்ற தகவல்கள் தெரியவரும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
