ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
சென்னை - செங்கல்பட்டு இடையே இன்று 19 ரயில்கள் ரத்து
ெ சன்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பகுதியாகவும், முழுமையாகவும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை - விழுப்புரம் பிரிவில் சிங்கப்பெருமாள்கோவில் யாா்டில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 மணிக்கு புறப்படும் புகா் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள்கோவில் வரையே செல்லும்.
அதேபோல, காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புகா் மின்சார ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்படும்.
முழுமையான ரத்து: செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே செல்லும் புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை காலை 9.55, 10.40, 11, 11.30, 12, பிற்பகல் 1.10 ஆகிய நேரங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள்: பல புகா் மின்சார ரயில்கள் ரத்தாகும் நிலையில் பயணிகள் வசதிக்காக காட்டாங்குளத்தூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து காலை 10.46, 11, 11.20, பகல் 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 11.30 மற்றும் பகல் 1.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு என பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.