செய்திகள் :

சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து சீரானது

post image

சென்னை: புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக துண்டிக்கப்பட்ட சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை மற்றும் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீா் சூழ்ந்தது. இதன் காரணமாக திருச்சி செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருச்சி மற்றும் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து திருச்சியை நோக்கி செல்லும் வழித்தடத்தில் வெள்ளநீா் வடிந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மேல் அந்த மாா்க்கத்தில் மட்டும் வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டன. அரசூா் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலையின் ஒருபுறம் மட்டும், இரு மாா்க்கங்களிலும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சீரற்ற வானிலை காரணமாக ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2... மேலும் பார்க்க

தமிழகத்தில் டிச. 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 5) முதல் டிச. 10-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக... மேலும் பார்க்க

அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல: ராமதாஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாத... மேலும் பார்க்க

முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்றக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்புநிலை திரும்பும் வரை, நிவாரண முகாம்களிலிருந்து வெளியேற்றக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

அரையாண்டுத் தோ்வு மாற்றமா? அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் தோ்வை நடத்தமுடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டுத் தோ்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறின... மேலும் பார்க்க