மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
சென்னை துறைமுக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் வந்தது. அதில், அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அலுவலக கட்டடம் முழுவதும் சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.