செய்திகள் :

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

post image

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கிங்ஸ்டனிடம் பேசினர். பின்னர் கிங்ஸ்டனை காரில் ஏறும்படி அந்தக் கும்பல் கூறியது.

kidnap

அதற்கு கிங்ஸ்டன் மறுக்க, ஒரு பெண்ணின் பெயரைக் கூறி, அவரின் காதலன் குறித்து பேச வேண்டும் என அந்தக் கும்பல் கூறியது. இதையடுத்து கிங்ஸ்டன் அந்தக் காரில் ஏறியிருக்கிறார்.

பின்னர் செல்லும் வழியில் கிங்ஸ்டனின் நண்பன் ரோகித்தையும் அந்தக் கும்பல் காரில் ஏற்றி அழைத்து சென்றிருக்கிறது.

இதைக் கவனித்த கிங்ஸ்டனின் நண்பர்கள், தங்களின் டூவிலரில் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து காசிமேடு பகுதியில் கார் நிற்கவும் கிங்ஸ்டன், ரோகித் ஆகியோர் காரை விட்டு இறங்கினர்.

அப்போது காரைப் பின்தொடர்ந்து வந்த கிங்ஸ்டனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் அந்தக் கடத்தல் கும்பல் காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையடுத்து கிங்ஸ்டன் தரப்பில் தன்னையும் தன் நண்பரையும் ஒரு கும்பல் காரில் கடத்திய தகவலை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கிங்ஸ்டன், ரோகித்தை கடத்தியது வேளச்சேரியைச் சேர்ந்த மோகன்தாஸ் (21), ஆர்.ஏ புரத்தைச் சேர்ந்த தனுஷ்ராஜ் (22), பள்ளிக்காரணையைச் சேர்ந்த சாய் பிரசன்னா (21), பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன், பள்ளிக்காரணையைச் சேர்ந்த அபிஷேக் எனத் தெரியவந்தது.

கைது

அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மோகன்தாஸ் என்பவர் கல்லூரி மாணவர். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணுடன் கிங்ஸ்டன் பழகி வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிங்ஸ்டனை கடத்திச் சென்றிருக்கிறார்.

அப்போது கிங்ஸ்டனுக்கு ஆதரவாக பேசிய ரோகித்தையும் இந்தக் கும்பல் கடத்தியிருக்கிறது. இதையடுத்து 5 கல்லூரி மாணவர்களையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்... மேலும் பார்க்க

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்... மேலும் பார்க்க