செய்திகள் :

சென்னை: பட்டுப்புடவை வாங்கினால் தங்கம் இலவசம்; பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு

post image

தொழில்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரியதர்ஷினி நிறுவனம் சென்னை கே.கே.நகர் பி.வி. ராஜமன்னார் சாலை, ஆர்.டி.ஓ. மைதானம் எதிரில், பிரியதர்ஷினி சில்க்ஸ் என்ற பிரமாண்ட ஷோரூமை திறந்துள்ளது.

திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். எஸ்.என்.ஜெ. குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். பத்மபூஷண் நல்லி குப்புசாமி செட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு
பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு

விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா குத்து விளக்கு ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் க.தனசேகரன், கல்யாணமாலை டி.வி.மோகன், கவுன்சிலர் கே.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்தவர்களை பிரியதர்ஷினி நிறுவனர் எம்.ஜி.சுரேஷ்குமார் மற்றும் எம்.ஜி.எஸ். சூர்யகுமார், எம்.ஜி.எஸ். பிரியதர்ஷினி ஆகியோர் வரவேற்றனர்.

பிரியதர்ஷினி சில்க்ஸ் திறப்பு விழாவையொட்டி பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக பட்டுப் புடவை வாங்கினால் தங்கம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதர ஆடைகள் வாங்குபவர்களுக்கு வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஸ்டாக் உள்ளவரை மட்டுமே உண்டு.

மேலும் ஒரு ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கலாம். மீதியை சுலப தவணையில் செலுத்தலாம். ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசும் வழங்கப்படுகிறது.

பிரியதர்ஷினி சில்க் ஷோரூமில் அசல் காஞ்சீபுரம் பட்டுப்புடவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டுப் புடவைகள் கிடைக்கின்றன. இங்கு தேர்ந்தெடுக்க ஏராளமான புதிய டிசைன்கள் உள்ளன.

பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு
பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு

சொந்த தறியில் உருவான உயர்தரமான பாரம்பரிய பட்டு புடவைகளை மனம் கவரும் வகையில் வாங்கலாம். இதனால் பட்டுச்சேலைகள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

பெண்களுக்கு பிடித்தமான பல வகையான ஆடை ரகங்களும் இங்கு உள்ளன. மேலும் ஆடைகளுக்கு ஏற்ற வெள்ளி நகைகளும் கிடைக்கின்றன. இங்கு ஒரு ஒரிஜினல் பட்டுப்புடவைகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான விலையில் இடம் பெற்றுள்ளன.

34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?

மும்பைக்கு அருகே உள்ள அலிபாக் இன்று பல பிரபலங்களின் விருப்பமான விடுமுறை இடமாக மாற்றியிருக்கிறது. ஷாருக் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் அங்கு வீடு வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்... மேலும் பார்க்க