பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்: பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பார...
சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!
சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்க உள்ளது. ஒருசில பகுதியில் வெய்யில் சதம் அடித்துள்ளது.
இருப்பினும், அதீத வெப்பத்தால் ஆங்காங்கே அவ்வப்போது இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் பிற்பகல் 1 மணியளவில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பாடி, அண்ணாநகர், போரூர், வளரவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் சுற்றுப் பகுதியில் மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்துள்ளது.
அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த வாரம் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கஉள்ளது.
தமிழகத்தில் இந்த மாதத்தின் கடைசியில் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.