இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!
சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோடம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, மரக்கிளையானது, மின்கம்பம் மீது விழுந்ததால், மின்கம்பம் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் புறநகர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், அரை மணி நேரத்துக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 மணி நேரம் ஆகியும் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். பலர் மாற்று சேவைகளை நாடியுள்ளனர்.
திடீர் அறிவிப்பு காரணமாக, கல்லூரிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பாதுகாப்புக் கருதியே மரக்கிளைகள் அகற்றும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்தை புரிந்துக்கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்க: நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!