சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார்.
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் வீடுகளைப் பெற்ற மக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணி பரிமாறினார்.
சென்னை மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.