சரியான புரமோஷன் இல்லை... புலம்பும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
சென்னை மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை வேளச்சேரியில் மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரி பகுதியில் உள்ள தனியாா் மகளிா் விடுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞா், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சப்தமிட்டதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பினாா்.
இந்தச் சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (25) என்ற இளைஞா் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் லட்சுமணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதேபோல, பல மகளிா் விடுதிகளில் இத்தகைய செயலில் லட்சுமணன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.