செய்திகள் :

சென்னை மாநகரின் மண்டலங்கள் உயர்வு!

post image

சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்கு உட்பட்ட நிருவாக பகுதிகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஏற்கெனவே உள்ள திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் மணலி சேர்க்கப்பட்டு 14 மண்டலங்களாக உள்ள நிலையில், புதிதாக கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி - சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 15 மண்டலங்களிலிருந்து 20 மண்டலங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழ... மேலும் பார்க்க

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: உதவி எண்கள் அறிவிப்பு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/... மேலும் பார்க்க

சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி - திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திண்டுக்கல் சிறுமலையில்... மேலும் பார்க்க

சீமான் மேல்முறையீட்டு மனு; திங்கள்கிழமை விசாரணை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 20... மேலும் பார்க்க

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமீன் !

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், சுபாகருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது 2 ... மேலும் பார்க்க