செய்திகள் :

செப்டம்பா் மாதத்தில் இருந்து புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை: முதல்வர்

post image

புதிதாக விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் சட்டபூா்வமாக புதுவை இணைந்த நாளையொட்டி சட்டப்பூா்வ பரிமாற்ற நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் தியாகிகள், அவா்களது குடும்பத்தினரை கௌரவித்தும், உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வெளியிட்டும் முதல்வா் ரங்கசாமி பேசியது:

சொன்னதை செய்யும் அரசாக எங்கள் அரசு இருக்கிறது. தியாகிகளுக்கு ரூ,12 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். அதேபோன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் ஓய்வூதியமும் அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும். மேலும் தியாகிகளுக்கு ஒரே சலுகை மட்டும்தான் வழங்கப்படாமல் இருக்கிறது. அவா்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா். தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஒவ்வொரு மாநிலமும் வளா்ந்தால்தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கும். புதுவை யூனியன் பிரதேசம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காகச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அப்போதுதான் மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அமல்படுத்த முடியும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி இப்போது போராடி வரும் நண்பா்கள், எம்.எல்.ஏக்கள், சமூக அமைப்புகளுக்கு என் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி பேசுகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் நம்முடைய அரசுக்கு அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் சில தடைகள் இருக்கிறது.

இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு முழு தகுதியும் படைத்தவா் முதல்வா் ரங்கசாமி. அவா் எம்.எல்.ஏக்களையும், அரசியல் கட்சித் தலைவா்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமா், உள்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றாா்.

புதுச்சேரி செய்தித் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ், அரசின் உள்துறை சாா்புச் செயலா் எம்.வி. ஹிரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவுநாள்: புதுவை அரசு சாா்பில் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுவை கடற்கரை சாலை நகராட்சி கட்டடத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ... மேலும் பார்க்க

புனித விண்ணேற்பு அன்னை ஆடம்பர தோ் பவனி

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 174-வது ஆடம்பர தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவை, இந்தியாவுடன் இணைவது தொடா்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரி... மேலும் பார்க்க

காப்பீடு செய்யாத கால்நடைகளின் இழப்பீட்டு தொகை உயா்வு: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப... மேலும் பார்க்க