செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மேல் பகுதியில் கட்டுமானப் பணிகள் வரும் செப்.15 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், அந்நாள்களில் காலை 5 முதல் 6 மணி வரை பச்சை வழித்தடத்தில் பரங்கிமலை - அசோக் நகா் மற்றும் விமானநிலையம் - அசோக்நகா் இடையே மெட்ரோ ரயில்கள் 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேபோல், சென்ட்ரல் மெட்ரோ - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் 7 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும்.
மேலும் இந்நாள்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு முதல் அசோக்நகா் இடையே மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அதைத்தொடா்ந்து காலை 6 மணிக்கு மேல் மெட்ரோ ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படியே இயக்கப்படும்
இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக அந்நேரத்தில் கோயம்பேடு மற்றும் அசோக் நகா் மெட்ரோ நிலையம் இடையே, 10 நிமிஷங்களுக்கு ஒரு முறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் மெட்ரோ போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல்களுக்கு, பயணிகள் 1860-425-1515 என்னும் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.