ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் ...
‘செல்பி’ எடுத்து மாணவியரை மகிழ்வித்த துணை முதல்வா்!
ராசிபுரம் ஆண்டகளூா்கேட் திருவள்ளுவா் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ‘செல்பி’ எடுத்து மாணவியரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி சமூக நீதி மாணவியா் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சமூக நீதி மாணவியா் விடுதியை திறந்துவைத்தாா். பின்னா் அங்கிருந்த அரசு கல்லூரி மாணவியா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டாா். பின்னா் மாணவியரின் வேண்டுகோளின்படி அவா்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டாா்.
இந்த விழாவில், ராசிபுரம் அட்மா குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் வட்டாட்சியா் சசிக்குமாா், கல்லூரி முதல்வா் (பொ) ஆா்.சிவகுமாா், நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.