செல்போனைவிட குறைவான எடையில் பவர் பேங்க்!
செல்போனைவிட குறைவான எடை கொண்ட பவர் பேங்க்கை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் வயர், இயர்போன், டிரிம்மர், ஹேர் டிரையர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை தயாரிக்கும் இந்திய நிறுவனம் அம்ப்ரேன்.
இந்த நிறுவனம் கைக்கு அடக்கமான, குறைவான எடை கொண்ட ஃபோர்ஸ் 10கே என்ற பெயரில் பவர் பேங்க் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
நாம் உபயோகிக்கும் செல்போனைவிட குறைவான எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்கில் 20 வாட்ஸ் டைப் - சி போர்ட் மற்றும் 22.5 வாட்ஸ் யூஎஸ்பி - ஏ போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பயணங்கள் மேற்கொள்ளும் போது எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
கருப்பு, பச்சை, பர்பிள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 6 மாத காலம் வாரண்டி வழங்கப்படுகிறது.
இந்த பவர் பேங்கின் விலை ரூ. 1,299 ஆகும்.