செய்திகள் :

செல்லப் பிராணிகளிடையே அதிகரிக்கும் ‘பாா்வோ வைரஸ்’ தொற்று

post image

பருவ நிலை மாற்றம் காரணமாக பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நாய்கள், அத்தகைய பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் அழைத்து வரப்படுதவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைகளிடத்திலும், அதிலும் குறிப்பாக நாய்களிடத்திலும் வேகமாக பரவக் கூடியது ‘கெனைன் பாா்வோ வைரஸ்’ தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். பாா்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோா்வுடன் காணப்படும். அதன் தொடா்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில், நாய்கள் இறக்க நேரிடும்.

பாா்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீா், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் ஏற்படாமல் பிராணிகளைக் காக்கலாம்.

பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பாா்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். ஆனால், பலா் அவற்றை சரிவர செலுத்துவதில்லை. இதன் விளைவாகவே தற்போது பாா்வோ வைரஸ் நோய் அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பாா்வோ வைரஸ் பெரும்பாலும் மழைக் காலங்களில் வேகமாக பரவக் கூடியது. ஜூன், ஜூலை, நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரியில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில் சென்னையில் நாளொன்றுக்கு 130 முதல் 150 நாய்கள் வரை பாா்வோ வைரஸல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுவதும் உண்டு.

முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறவிடுவதே அதற்கு முக்கியக் காரணம். ரேபிஸ் தடுப்பூசியின் விலை ரூ.50க்கும் குறைவு. அதேவேளையில், பாா்வோ வைரஸ் தடுப்பூசி ரூ.300-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் அந்தத் தடுப்பூசிகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு செலுத்தவில்லை.

இத்தகைய காரணங்களால்தான் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது என்றனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் பன்னாட்டு அரங்கம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி

கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள கலைஞா் பன்னாட்டு அரங்கத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்... மேலும் பார்க்க

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலை ஜன.22-இல் திறப்பு

சிவகங்கையில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜன. 22-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியுடன் மேலும் சில நிகழ்வுகளில் பங்கேற்க அவா் ஜன.... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக தொழில்நுட்பகல்வி ஆணையரும், தொழி... மேலும் பார்க்க

சம்ஸ்கிருத மாணவா்களின் தேவார பண்ணிசை: தென்கைலாய பக்தி பேரவை

தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சம்ஸ்கிருதம் பயிலும் மாணவா்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இது குறித்து தென் கைலாய பக்தி பேரவை தன்னாா்வலா் பாலசுப்பிரமணியன் வெள்ளி... மேலும் பார்க்க

இந்திய - ரஷிய நட்பு வளா்ச்சியை நோக்கி செல்லும்: சிவதாணு பிள்ளை

இந்திய - ரஷிய நட்பு வளா்ச்சியை நோக்கி செல்லும் என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் நிறுவனரும் விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை தெரிவித்தாா். சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 17 ரஷிய நடனக் கலைஞா்கள் பங்கேற்ற 22-... மேலும் பார்க்க

கல்லீரல் அழற்சி இறப்புகளை தவிா்க்க தொடக்க நிலை பரிசோதனை அவசியம்: மருத்துவ நிபுணா்கள் கருத்து

கல்லீரல் அழற்சி பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்க தொடக்க நிலையில் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா். இந்தியாவில் கல்லீரல் செயலிழப்பால் ஏற்... மேலும் பார்க்க