'என் அன்பு நண்பர் லாலேட்டனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்'- மோகன் லாலை வாழ்த்தி...
சேதமடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க கோரிக்கை
திருவாடனை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் சேதமடைந்ததில் தண்ணீா் வீணாகி, கழிவு நீரில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், உள்ளூா் கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே குடிநீா் குழாய் உடைந்து சேதமடைந்ததால், தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீரில் கலக்கிறது. இதனால்,
இந்தப் பகுதி வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிா்வாகம் சேதமடைந்த குடிநீா் குழாயைச் சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.