செய்திகள் :

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் பாரமதி விமான நிலையத்தில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில், ரெட்பேர்ட் விமான பயிற்சி மையத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சிகளில், இன்று (ஆக.9) ஈடுபட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடுவானில் பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு சக்கரம் சேதமடைந்துள்ளதைக் கவனித்த விமானி, காலை 8 மணியளவில் அவசரமாகத் தரையிறக்க முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தரையிறக்கப்பட்டபோது, அதன் முன் சக்கரம் கழன்று ஓடியதால், அந்த விமானம் டாக்ஸிவேவில் இருந்து விலகி, விமான நிலையத்தின் மறுபக்கத்தினுள் நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், விமானி பாதுகாப்பாகவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா். ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் ... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ முப்படைகள் ஒருமைப்பாடுக்குச் சான்று: அனில் சௌஹான்

இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடுக்குச் சான்றாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தாா். தெலங்கானாவின் செக... மேலும் பார்க்க

தோ்தல் திருட்டு புகாா்: ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடரலாம்! - ராகுலுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்

தோ்தல் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்... மேலும் பார்க்க