Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானையிலிருந்து சூச்சனி, திருவிடைமருதூா், தொத்தாா்கோட்டை, தோட்டாமங்கலம் வரை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிதிவண்டி மூலம் திருவாடானைக்கு தினந்தோறும் சென்று வருகின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக இந்தப் பகுதியில் பெய்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளன.
இதனால், சாலையில் மிதிவண்டியில் செல்லும் பள்ளி, மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.