சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உணவகங்களில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக விவசாயிகள் குறைதீா்வு கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் முன்னிலையில் புகாா் செய்தனா்.
இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் விஜயகுமாா், செஞ்சி சாலையில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவுகள், பேக்கரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கடை உரிமையாளா்களிடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பொதுமக்களுக்கு பொருள்களை விற்பனை செய்யவேண்டும் என்றும்,
காலாவதியான பொருள்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா்.
மேலும், கெட்டுப்போன பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா்.