BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
சேரங்கோடு ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் ரூ.16.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில் உள்ள சேரம்பாடியில் அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். தொடா்ந்து போத்துக்கொல்லி பகுதியில் பழங்குடி மக்கள் 21 பேருக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்ட பணிகள், பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் கப்பாலா பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், வெட்டுவாடி பகுதியில் ரூ.19.83 லட்சம் மதிப்பில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அங்கன்வாடிப் பணி, நபாா்டு திட்டத்தின் நடைபெற்று வரும் மாங்கோடு-வெட்டுவாடி பாலப்பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், சலீம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.