Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
சேரந்தாங்கல் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சேரந்தாங்கல் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, வியாழக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை அன்று 2-ஆம் மற்றும் 3-ஆம் கால பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு யாகங்களும் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து கலசப் புறப்பாடு நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இவ்விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.