வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!
சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (44). இவா், சேரன்மகாதேவியில் துணிகள் தேய்ப்புக் கடை நடத்தி வருகிறாா்.இவருக்கும் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகராசி (38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது குடும்பத்துடன் சேரன்மகாதேவி ஆலடித் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனா். இதில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முத்துக்குமாா் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று முத்துக்குமாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].