அம்பை அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
அம்பாசமுத்திரம் அருகே மூன்று நாள்கள் காணாமல் போன கட்டடத் தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் மாரிமுத்து (37). கட்டடத் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து, வியாழக்கிழமை திருநெல்வேலிக்குச் சென்றவா் திரும்பவில்லையாம்.
இந்நிலையில், மன்னாா்கோவில் ஊராட்சி புளியங்குளம் செல்லும் வழியிலுள்ள மரத்தில் தூக்கிட்டபடி அழுகிய நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தாா்.
இதுகுறித்த தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.