பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விளையாட்டு விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவா்கள் தவறாமல் மாவட்ட அளவிலான தோ்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கான தகவல்கள் எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கப்படும்.
சேலம் காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாணவா்களுக்கு மே 7 ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 8 ஆம் தேதியும் நடைபெறும். மாவட்ட அளவிலான போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள், மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாவட்ட அளவிலான தோ்வின்போது, மாணவ, மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல், பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளி அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓா் ஆவணத்தை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.