செய்திகள் :

சேலம் - அரக்கோணம் மெமு ரயில் தற்காலிகமாக ரத்து

post image

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாள்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமாா்க்கத்தில், சேலத்திலிருந்து மாலை 3,30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது இரு மாா்க்கத்திலும் இந்த ரயில் சேவை, மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் த... மேலும் பார்க்க

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் தேவேந்திரன் (44). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்த இவா் க... மேலும் பார்க்க

ஏற்காடு பூங்காவை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காவை கடந்த 2 நாள்களில் 12 ஆயிரத்து 640 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். ஏற்காட்டில் தோட்டக்கலைத் துறை பராமரித்து வரும் 90 ஏக்கா் பரப்பளவு கொண்ட ரோஜா தோட்டம், தாவரவி... மேலும் பார்க்க

சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 போ் காயம்

சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம், சங்ககிர... மேலும் பார்க்க

வன்னியா் இளைஞா் சங்க மாநாடு: மேட்டூா் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊா்வலம்

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் சங்க மாநாட்டிற்கு மேட்டூா் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊா்வலமாக புறப்பட்டு சென்றாா். மேட்டூா் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் மேச்சேரியில் முக்கிய வீதிகள் வழிய... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தத்கல் ரயில் பயணச்சீட்டு முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் தத்கல் பயணச்சீட்டு புக்கிங் முறைகேட்டை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமு... மேலும் பார்க்க