ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்க...
சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து
சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெயின் ரோடு பகுதியில் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது.
இதனால் அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா், உடனடியாக ஜான்பாஷா மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். விரைந்து சென்ற உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான வீரா்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். எனினும், இந்த விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள், மரச்சாமான்கள், பழைய இரும்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.