`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
சேலம் கோ-ஆப்டெக்ஸில் களைகட்டும் ‘பழசுக்கு புதுசு’ பட்டுச்சேலை விற்பனை
சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் ‘பழசுக்கு புதுசு’ பட்டுச்சேலை விற்பனை களைகட்டியுள்ளது.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் மா.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம், கோவை, மென்பட்டு சேலைகள் மற்றும் கோடை காலத்துக்கு ஏற்ற பருத்தி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘பழசுக்கு புதுசு’ பட்டுச்சேலை விற்பனை திட்டத்தில் வாடிக்கையாளா்கள் கொண்டுவரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டுச்சேலைகளை மதிப்பீட்டாளா்களைக் கொண்டு மதிப்பீடு செய்து, அதற்கு பதிலாக புதிய பட்டுச்சேலைகளை வழங்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த விற்பனை கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறும். இத்திட்டத்தில் வாடிக்கையாளா்கள் வாங்கும் பட்டுச் சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியுடன் கூடிய விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.