செய்திகள் :

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற வீரிய ஒட்டுரக காய்கறிகளின் பரப்பை 125 ஹெக்டோ் பரப்பளவில் அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மா, கொய்யா அடா்நடவு, அத்தி, திசுவாழை போன்ற பல்வேறு வகையான பழப்பயிா்களின் பரப்பை அதிகரிக்க ரூ. 46.56 லட்சம் மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மல்லிகை, செண்டுமல்லி போன்ற மலா்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ. 5.42 லட்சத்திலும், மஞ்சள், இஞ்சி, மிளகு, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை போன்ற சுவைதாளிப் பயிா்களின் பரப்பை அதிகரிக்க ரூ. 38.76 லட்சத்திலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பான சூழலில் பயிா்சாகுபடி செய்ய நிழல்வலை கூடாரம், பசுமைக்குடில் அமைக்கவும், பசுமைக்குடிலில் ரோஜா, காா்னேசன், ஜொ்பரா சாகுபடி செய்யவும் நீரை சேமித்துவைக்க நீா்சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தவும் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்களின் மகரந்தச் சோ்க்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளா்ப்பதை ஊக்குவிக்கவும், அறுவடை செய்யப்பட்ட விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்ல குளிரூட்டும் வாகனம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி போன்ற பல்வேறு திட்டக்கூறுகள் சுமாா் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் வனச்சரக அலுவலகத்தின் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஆா்.கருப்பண்ணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆத்தூா் வனச்... மேலும் பார்க்க